இலவச செக்ஸ்ன்னா இதைவிட அதிகமா கூடுவாங்க- ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய ராதா ராஜன்

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின்றி, எந்த ஒரு தனிப்பட்ட தலைமையின்றி, தன்னலம் கருதாது இண்டர்நெட் மூலம் இணைந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். ஒரே ஒரு இரவு புத்தாண்டு கொண்டாடிய பெங்களூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். ஆனால் மூன்று இரவுகள் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் எந்த ஒரு பெண்ணுக்கும் எவ்வித பிரச்சனையும் எழாமல் நாகரீகமான முறையில் உலகிற்கே ஒரு வழிகாட்டியாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இளைஞர்களின் இந்த புனிதமான புரட்சியை பீட்டா ஆர்வலர் ஒருவர் கொச்சைப்படுத்தியுள்ளார். இந்த போராட்டம் குறித்து பீட்டா அமைப்பின் ஆர்வலர் ராதா ராஜன் என்பவர் பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டி அளித்தபோது 'இலவசமாக செக்ஸ் கொடுக்குறதா சொன்னாக் கூட இதைவிட அதிகமான பேர் வருவாங்க. ஒரு பிரச்சனை வந்தா, அதுக்கு மக்கள் தெருவுக்கு வந்துதான் போராடனும்றது அவசியம் இல்லை.
நம்ம நாட்டு மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவங்க அதனால் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்ப மதிக்கணும்' என்று தெரிவித்துளார். இவருடைய இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக இணையதளங்களில் கடும் கண்டங்கள் வலுத்து வருகின்றன.

More News

நான் பீட்டா உறுப்பினர் அல்ல. செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. எப்படியும் இந்த போராட்டத்தில் வென்றே தீருவது...

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் ஹீரோவான காவலர்

சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது., இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எந்தவித வன்முறையும் இதுவரை நடைபெற்றது இல்லை...

ஐபிஎல் கிரிக்கெட் போல இனி ஜல்லிக்கட்டு லீக். நடிகர் வீரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன் நேற்று முன் தினம் இரவு முதல் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பலரசிகர்களும் நடிகர்களும் உட்கார்ந்து போராடி வருகின்றனர்...

நடிகர் சங்கத்தின் மெளன போராட்டத்தில் அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருபக்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான்கு நாட்களாக போராடி வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று ஒருநாள் மெளன போராட்டம் நடத்துவதாக அறிவித்தது...

ஊடகங்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள்

இந்நிலையில் நடிகர் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன அறப்போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டத்தை ஊடகங்களில் இருந்து திசை திருப்பும் வகையில் உள்ளதாக மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்...