close
Choose your channels

தயவுசெய்து தவறான செய்தியை பரப்ப வேண்டாம்: மனோபாலா வேண்டுகோள்

Saturday, September 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இயக்குனருமான மனோபாலா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சதுரங்க வேட்டை 2'. அரவிந்தசாமி, த்ரிஷா முதன்முதலில் ஜோடி சேரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாகவும், இந்த படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மனோபாலா தனது டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதில், 'சதுரங்க வேட்டை 2' திரைப்படத்தின் ரிலீஸ் அக்டோபரில் இல்லை என்றும், நவம்பரில் தான் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தயவுசெய்து தவறான செய்தியை பரப்ப வேண்டாம்' என்றும் அவர் கூறியுள்ளார். 

அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு வினோத் கதை திரைக்கதை எழுத, நிர்மல் குமார் என்பவர் இயக்கி வருகிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வரும் இந்த படத்திற்கு அஸ்வமித்ரா என்பவர் இசையமைத்து வருகிறார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment