ரெம்டெசிவிர் வாங்க நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம்: காவல்துறை அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நேரு ஸ்டேடியத்தில் விற்பனையாகி வருகிறது

ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பதாலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு நேற்று ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க நேரு ஸ்டேடியம் வர தேவையில்லை என்றும் அறிவித்து இருந்தது 

இந்த நிலையில் சற்று முன் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி தமிழக முதல்வர் உத்தரவுப்படி தனியார் மருத்துவமனைகளில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் ரெம்டெசிவிர் மருந்து வாங்க யாரும் நேரில் வர வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

More News

ஒரே மணமேடையில் அக்கா-தங்கைக்கு தாலி கட்டிய வாலிபர்! மணமகள்கள் வீட்டார் மகிழ்ச்சி!

வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் அக்கா தங்கை ஆகிய இருவருக்கும் தாலிகட்டி மனைவிகளாக ஏற்றுக்கொண்டதை அடுத்து அந்த மணமகள்களின் வீட்டார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு திரையுலக பிரபலம்: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில நாட்களாக திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் உயிரிழந்து வருகின்றனர் என்பதையும் பலர் அதிலிருந்து குணமாகி வருகின்றனர்

அருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி!

தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருசிலர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.

அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கொரோனா வைரஸ் காரணமாக பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். கொரோனாவால் திரையுலக பிரபலங்களின் உயிரிழப்புகள் பெரும்