நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்: அதிர்ச்சியில் பெற்றோர்!

  • IndiaGlitz, [Saturday,September 18 2021]

கடந்த ஞாயிறன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு எழுதிய 3 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்ற செய்தி தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் திடீரென மாயமாகி உள்ளது அவரது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சின்ன அறியாகவுண்டம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஸ்வேதா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அவர் நீட் தேர்வு எழுதிய நிலையில் திடீரென நேற்று காலை சுவேதா வீட்டிலிருந்து மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரமாக தேடியும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ஸ்வேதாவின் தந்தை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் தனிப்படை அமைத்து மாணவி ஸ்வேதாவை தேடி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

More News

'மணி ஹெய்ஸ்ட்' ரீமேக்கா அட்லி-ஷாருக்கான் படம்?

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார்

பா ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' மற்றும் 'கபாலி' ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார்?

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரி வரும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் களத்தில் இறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்!

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னுடைய

சூப்பர் சிங்கர் வைல்ட்கார்டில் வெற்றி பெற்றவர் யார்? மானஸியின் ஆனந்தக்கண்ணீர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டி கடந்த வாரம் நடைபெற்றது என்பதும்