close
Choose your channels

விபத்துக்கு பின் திடீரென மாயமான டிடிஎஃப் வாசன்.. வலைவீசி தேடும் போலீசார்..!

Monday, September 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹீலிங் செய்ய முயன்றதால் விபத்துக்குள்ளானார் என்பதும் அவர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்த நிலையில் திடீரென தற்போது டிடிஎஃப் வாசன் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் தனது நண்பர் அஜீஸ் என்பவர் வீட்டுக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது அவர் இல்லை. மேலும் அவரை பார்க்க பல நண்பர்கள் அஜிஸ் வீட்டுக்கு வந்தபோது அஜீஸின் அம்மா டிடிஎஃப் வாசன் தன்னுடைய வீட்டிற்கு வரவில்லை என்றும் அவர் எங்கே சென்றார் என்பது தனக்கு தெரியாது என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் போலீசார் டிடிஎஃப் வாசனை வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 பிரிவுகளில் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய அவரை தேடி வருவதாகவும் விரைவில் அவரை கண்டுபிடித்து விசாரணை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.