கமல், ரஜினி பட நடிகையை காணவில்லையா? போலீசார் தேடி வருவதாக தகவல்..!

  • IndiaGlitz, [Monday,January 01 2024]

கமல், ரஜினி பட நடிகை வழக்கு ஒன்றில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நிலையில் அவரை காணவில்லை என்பதால் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் ,ரஜினிகாந்த், விஜயகாந்த் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை ஜெயப்பிரதா, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் பலமுறை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை என்ற நிலையில் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனவரி 10ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜெயப்பிரதாவை காணவில்லை என்றும், அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ பணத்தை முறைகேடு செய்ததாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் ஜெயபிரதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர்குட் பிலிம்ஸ் 98வது படம்.. மீண்டும் இணையும் 'மாமன்னன்' டீம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில்

பணப்பெட்டியை எடுத்து வெளியேறும் போட்டியாளர் இவராக இருக்கலாம்? மாயாவின் கணிப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் உறவினர்கள் வருகை, டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை அடுத்து பணப்பெட்டியை எடுக்கும் டாஸ்க் தான் வரும்

அக்கா அக்கான்னு கூப்பிட்டவனை சோலியை முடிச்சிட்டாங்க..! நிக்சன் எவிக்சன் குறித்து தினேஷ் குரூப்..!

அக்கா அக்கா என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவனை பூர்ணிமா என கூப்பிட வைத்து சோலியை முடிச்சிட்டாங்க என தினேஷ் குரூப்பினர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

கமல் - மணிரத்னம் இணையும் 'தக்லைஃப்' படப்பிடிப்பு எப்போது? எங்கே?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தக்லைஃப்' திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்

தினேஷ் உடன் குத்துச்சண்டை.. தோல்வி அடைபவர் நாமினேஷன்.. செம்ம ட்விஸ்ட் அளித்த பிக்பாஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் சிக்குபவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் அந்த வாரத்தில் இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும்