சூர்யாவின் பாதுகாப்பு குறித்து உளவுத்துறை கூறிய முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,November 17 2021]

’ஜெய்பீம்’ பட சர்ச்சை தொடர்பாக சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு உளவுத்துறை அளித்த தகவலின்படி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா நடித்து தயாரித்த ஜெய்பீம் படம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஒரு சிலர் கூறியதை அடுத்து சூர்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜெய்பீம் படம் தொடர்பாக ஆவேசமான கருத்துக்களை ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக சூர்யா மீது தனிப்பட்ட தாக்குதல் விடுக்கும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆயுதப்படை போலீசார் 5 பேர் இருபத்திநான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தரப்பிலிருந்து பாதுகாப்பு கேட்டு எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், இருப்பினும் உளவுத்துறை தகவலின்படி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More News

என்னைப்பத்தி நீ என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கே? ராஜூவுடன் மோதும் பாவனி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 'உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நேற்று அபினய் மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும்

மரணத்திற்கு பின் புனித் ராஜ்குமாருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது!

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில், அவரது மரணத்துக்குப் பிறகு மிகப்பெரிய விருது அவருக்கு அளிக்கப்படுவதாக

சுப்பிரமணியன் சுவாமியுடன் ரஜினி மகள் சந்திப்பு: காரணம் என்ன?

பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சுவாமி அவர்களை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க: 'ஜெய்பீம்' குறித்து சந்தானம்

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் குறித்து சர்ச்சையை ஒரு சிலர் எழுப்பி வருகின்றனர் என்பதும் இதனால் திரைஉலகம் மற்றும்

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதையும் நிறுத்துங்கள்: ஜெய்பீம் குறித்து நாசர்

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் மட்டும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன