பொங்கல் விடுமுறை நீக்கம். உண்மையில் நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Tuesday,January 10 2017]

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறையை இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாய விடுமுறையில் சேர்க்காமல் விருப்ப விடுமுறையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறையில் இல்லை என்பதும் அது விருப்ப விடுமுறையில்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்பட ஒவ்வொரு ஆண்டும் 14 கட்டாய விடுமுறை தினங்கள் கட்டாய விடுமுறை தினங்களாக இருப்பதுண்டு. இதுதவிர 3 நாட்கள் கூடுதல் விடுமுறைகளை அந்தந்த மாநிலத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த குழு இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை பட்டியலில் இணைக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனிக்கிழமைதான் வருகிறது. சனிக்கிழமை அதுவும் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையை தேர்வு செய்யாமல் அதற்கு பதிலாக சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா விடுமுறைகளை தேர்வு செய்துள்ளது.
எனவே இந்த பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் அதாவது தசரா பண்டிகை விடுமுறை நாள், கூடுதலாகத்தான் விடுமுறை கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு வழக்கம்போல் இந்த குழு பொங்கல் திருநாளைத்தான் விடுமுறையாக தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வேற லெவலில் விஜய் ஸ்டேட்டஸ். பைரவா' நடிகரிம் அனுபவம்

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கிய 'பைரவா' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'ஜல்லிக்கட்டு' வீரராக களமிறங்கும் விஜய்சேதுபதி

தமிழகம் முழுவதும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உணர்வு பூர்வமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

காந்தக்குரலார் ஜேசுதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இசைத்துறையில் 50 ஆண்டுகாலத்திற்க்கும் மேலாக சேவை செய்த பிரபல கர்நாடக, திரை இசைப்பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இது பிரேக் அப் அல்ல, வெறும் பிரேக் தான். தனுஷ் பிரிவு குறித்து அனிருத்

தனுஷின் '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், 'கொலைவெறி' பாடலின் மூலம் உலகப்புகழ் பெற்றார்.

பொங்கல் விடுமுறை ரத்து. தமிழர்களுக்கு மத்திய அரசின் தொடர் துரோகம்

பொங்கல் பண்டிகை என்பது காலங்காலமாக தமிழர்கள் கொண்டாடி வரும் தமிழ் கலாச்சார பண்டிகை.