close
Choose your channels

களத்தில் இறங்கி செண்டை மேளம் வாசித்த 'பொன்னியின் செல்வன்' ஹீரோ: வைரல் வீடியோ

Wednesday, September 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவர் களத்தில் இறங்கி செண்டை மேளம் இசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் கேரளா சென்ற போது மிகப்பெரிய வரவேற்பை அப்பகுதி மக்கள் அளித்தனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கேரளாவில் பிரபலமான செண்டை மேளம் வாசித்து படக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

அப்போது ஆர்வ மிகுதியால் நடிகர் விக்ரம் களத்தில் இறங்கி செண்டை மேளம் இசைத்தார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து செண்டையுடன் உங்களின் இதயத்துடிப்பு சிங்க் ஆவதை போல வேறு எதுவும் அமையாது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment