பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் பூஜா ஹெக்டே!

  • IndiaGlitz, [Saturday,April 16 2022]

திரையுலகின் முன்னணி நடிகைகள் தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக ’புஷ்பா’ படத்தில் இடம் பெற்ற ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபல நடிகைகள் தமன்னா, ரெஜினா, லட்சுமிராய் உள்ளிட்டோரும் ஒரு பாடலுக்கு சில படங்களில் நடனம் ஆடியுள்ளனர். இந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடித்து வரும் திரைப்படம் F3. இந்த படத்தில் நாயகிகளாக தமன்னா, மெஹ்ரின் பிர்ஜிதா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். அனில்ரவிபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் ஆடியதாகவும் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடிகை பூஜா ஹெக்டே, சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News

தாடி, மீசையை எடுத்துவிட்டு புதிய தோற்றத்தில் 'கேஜிஎப்' யாஷ்: வைரல் வீடியோ

கடந்த சில வருடங்களாக 'கேஜிஎப்' திரைப்படத்திற்காக நீண்ட தாடி மற்றும் தலைமுடி வளர்த்து வந்த நடிகர் யாஷ், தற்போது தாடி மற்றும் தலைமுடியை வெட்டி புதிய தோற்றத்திற்கு மாறியுள்ள

அஜித், விஜய்யை வன்மையாக கண்டிக்கின்றேன்: பிரபல நடிகர் பேச்சு

அஜித், விஜய் ஆகிய இருவரும் படத்தின் பட்ஜெட்டில் 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்வதால் தமிழ்சினிமா தரம் குறைந்து வருகிறது என பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பேசி இருப்பது

சமந்தாவின் வேற லெவல் பளுதூக்கும் வீடியோ: இணையத்தில் வைரல்

நடிகை சமந்தாவின் பளுதூக்கும் வீடியோ ஒன்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வேற லெவலில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு கோடி நன்கொடை மற்றும் வெற்றிமாறன் கைகாட்டும் நபருக்கு இயக்குனர் வாய்ப்பு: கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு!

வெற்றிமாறனின் அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கிய கலைபுலி எஸ் தாணு, வெற்றிமாறனின் அறக்கட்டளையில் படிக்கும் மாணவ மாணவிகளில் யாரை வெற்றிமாறன் கை காட்டுகிறாரோ

யுவன் போட்ட வீடியோ: விவாதத்தில் அனிருத் ரசிகர்கள்!

இசையமைப்பாளர் யுவன் பகிர்ந்த வீடியோவால் அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் விவாதம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.