close
Choose your channels

'தளபதி 65' பூஜை நடந்ததை உறுதி செய்த பூஜா ஹெக்டே: எப்படி தெரியுமா?

Wednesday, March 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’தளபதி 65’ படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது குறித்து செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று ’தளபதி 65’ படத்தின் பூஜை நடந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது டுவிட்டரில் கூறியபோது ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆனால் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டதன் காரணமாக என்னால் அந்த பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் ’தளபதி 65’ படக்குழுவினர்களுக்கு எனது இதயபூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் இந்த படக் குழுவில் இணைய நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் நெல்சன் ரஷ்யாவுக்கு லொகேஷன் பார்க்க சென்ற புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த படத்தின் ஒருசில பகுதியின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் என தெரிகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.