close
Choose your channels

டைட்டில் எடுத்துக்கோ, 50 லட்சம் எடுத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோ.. பூர்ணிமா சொன்னது யாரை?

Thursday, December 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’டைட்டில் எடுத்துக்கோ, 50 லட்சம் எடுத்துக்கோ என்ன வேணா பண்ணிக்கோ’ என பூர்ணிமா, அர்ச்சனா குறித்து கூறிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இன்று வெளியான இரண்டு புரமோ வீடியோவிலும் நிக்சன் மற்றும் அர்ச்சனா சண்டை குறித்த காட்சிகள் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மூன்றாவது வீடியோவில் இந்த சண்டை குறித்து நிக்ஸன் தனது சக போட்டியாளர்களுடன் பேசும் காட்சிகள் உள்ளன.

முதலில் நிக்சன், ‘இங்கே சுத்தி கெட்ட எண்ணம் உள்ள மனுஷங்களா தான் இருக்காங்க’ என்று சொல்ல அப்போது விக்ரம் சரவணன் ’ஆனால் வெளியே வேறு விதமாக பார்க்கப்படுகிறதே’ என்று ஏற்றி விடுகிறார்கள். அப்போது அருகில் இருக்கும் பூர்ணிமா ’தெரிஞ்சும் அவங்க வேண்டும் என்றே செய்றாங்க’ என்று அவரும் தனது பங்கிற்கு ஏற்றி விடுகிறார். அதுமட்டுமின்றி ’டைட்டில் எடுத்துக்கோ, 50 லட்சம் எடுத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோ’ என்று அர்ச்சனா குறித்து பூர்ணிமா கூறுகிறார்.

மொத்தத்தில் பூர்ணிமா கேங் நிக்சனுக்கு முழு ஆதரவு தருவதாக தெரிகிறது. அர்ச்சனா தனக்கு என்று யாரும் இல்லாமல் அவர் தனியாக சோகமாக இருப்பதுடன் இந்த புரமோ விடியோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.