பணப்பெட்டி எடுத்துட்டு வெளியில போயிருவேன், எனக்கு வின்னர் யாருன்னு தெரிஞ்சிருச்சு.. சொன்னது யார்?

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க் முடிந்ததும் அனேகமாக பணப்பெட்டி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் ஒரு லட்சம் என்று தொடங்கும் இந்த பணப்பெட்டியின் மதிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்சமாக 10 முதல் 15 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மாயா பூர்ணிமா மற்றும் விசித்ரா ஆகியோர் பணப்பெட்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் '15 லட்சம் பணப்பெட்டி வந்தவுடன் நான் அதை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். எனக்கு யாரு டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விட்டது’ என்று கூறினார். அதற்கு மாயா ’அர்ச்சனா தானே’ என்று கூற பூர்ணிமா ’ஆமாம்’ என்கிறார். ’கடந்த சில நாட்களாகவே அர்ச்சனா பாட்டு பாடியே மக்களை மயக்கி விடுகிறார் என்று விசித்ராவும் கூறுகிறார்.

அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என தற்போது ஒரு சில போட்டியாளர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் அதே நேரத்தில் பணப்பெட்டியை எடுக்க அதிக போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பூர்ணிமாவை தவிர மணி, ரவீனா, விஷ்ணு ஆகியோர்களும் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் எதிர்பார்த்தபடி அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆவாரா? பணப்பெட்டியை எடுத்துச் செல்லும் போட்டியாளர் யாராக இருப்பார்? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அவன் அவன் ஜெயிக்கனும்ன்னு ஆடனும்.. 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க்கில் நிக்சன் வாக்குவாதம்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் டிக்கெட் பினாலே என்ற டாஸ்க் நடந்து வருகிறது,. இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் ஒரு போட்டியாளர் நேரடியாக

தனுஷின் 'கேப்டன் மில்லர்' ரன்னிங் டைம் இவ்வளவா? சென்சாருக்கு பின் என்ன ஆகும்?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப

ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி.. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல்..!

ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், பார்வையாளர்களின் இதயங்களை வென்று இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயை கடந்து வசூலித்திருக்கிறது.

ஷாருக்கான் வீட்டின் முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்: டங்கி வெற்றியால் உற்சாகம்..!

ஷாருக்கானின் 'டங்கி' படத்தின் கட்அவுட்டுகள் உடன் அவர் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை ரசிகர்கள் கொண்டாடினர்..!

டிக்கெட் டு ஃபினாலே.. இறுதி மேடையை முத்தமிட போவது யார்? கடும் போட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுபவர்கள் யார் என்ற கேள்விகள்  பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது