28 வயது பிரபல பாப் பாடகி மர்ம மரணம்

  • IndiaGlitz, [Monday,November 25 2019]

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஹாரா மர்மமான முறையில் நேற்று அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

தென்கொரியாவின் பிரபல பாப் பாடகி ஹாராவின் உடல் நேற்று அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தென்கொரியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி நடிகையாகவும் பாப் பாடகராகவும் இருந்து வரும் ஹாராவின் பல பாப் பாடல்கள் உலகப்புகழ் பெற்றவை. ஹாராவின் முதல் சோலோ பாடல் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி தென்கொரியாவின் மியூசிக் சார்ட்டில் 4வது இடத்தை பிடித்தது.

ஏற்கனவே கடந்த வாரம் தற்கொலைக்கு முயற்சித்த ஹாரா, அதன்பின் தேறி வந்து, மீண்டும் ரசிகர்களுக்காக பாடுவேன் என்று கூறிய நிலையில் தற்போது மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஹாராவின் ஆண் நண்பர் இவரது ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், இதனையடுத்து அவர் மீது ஹாரா வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் இந்த வழக்கில் ஹாராவின் ஆண் நண்பருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தர்பாரின் 'சும்மா கிழிகிழி' சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்

என்னை பொருத்தவரை இவர்தான் 'சூப்பர் ஸ்டார்: விஜய் பட இயக்குனர்

விஜய் நடித்த 'வேலாயுதம்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்ராஜா, 'என்னை பொருத்தவரை என் அப்பா தான் எனக்கு சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார். 

ரிலீசுக்கு தயாராகும் பிரபல இயக்குனரின் இரண்டு படங்கள்

ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ஒரு படத்தையும்

கமல்-ரஜினி அரசியல் இணைப்பு குறித்து ஸ்ருதிஹாசன் கருத்து!

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த இணைப்பு குறித்து பல்வேறு

தமிழில் பேசட்டுமா? இந்தி நிருபரை அதிர வைத்த நடிகை டாப்ஸி

தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் நேற்று பிரபல நடிகை டாப்சி கலந்து கொண்டார்.