close
Choose your channels

28 வயது பிரபல பாப் பாடகி மர்ம மரணம்

Monday, November 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஹாரா மர்மமான முறையில் நேற்று அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

தென்கொரியாவின் பிரபல பாப் பாடகி ஹாராவின் உடல் நேற்று அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தென்கொரியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி நடிகையாகவும் பாப் பாடகராகவும் இருந்து வரும் ஹாராவின் பல பாப் பாடல்கள் உலகப்புகழ் பெற்றவை. ஹாராவின் முதல் சோலோ பாடல் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி தென்கொரியாவின் மியூசிக் சார்ட்டில் 4வது இடத்தை பிடித்தது.

ஏற்கனவே கடந்த வாரம் தற்கொலைக்கு முயற்சித்த ஹாரா, அதன்பின் தேறி வந்து, மீண்டும் ரசிகர்களுக்காக பாடுவேன் என்று கூறிய நிலையில் தற்போது மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஹாராவின் ஆண் நண்பர் இவரது ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், இதனையடுத்து அவர் மீது ஹாரா வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் இந்த வழக்கில் ஹாராவின் ஆண் நண்பருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.