60 வயதில் திருமணம் செய்து கொண்ட ரஜினி, விஜய் பட நடிகர்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

ரஜினி, விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



தமிழ் உட்பட 11 மொழிகளில் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ விஜய் நடித்த ’கில்லி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பில் அசத்திய இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது பலரும் அறிந்ததே.



இந்த நிலையில் ஏற்கனவே ராஜோஷி பருவா என்பவரை ஆஷிஷ் வித்யார்த்தி திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கௌஹாதியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

நடிகை அஞ்சலியின் 50வது படத்தின் அறிவிப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலியின் 50வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் படம்.. சமந்தா தான் நாயகி..!

சென்னையை டைட்டிலாக கொண்ட ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நீச்சல் குளத்தில் 40 வயது பிக்பாஸ் நடிகை.. வேற லெவல் கிளாமர் பிகினி புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 வயது நடிகை பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில்

'லவ் டுடே' இந்தி ரீமேக்கில் நடிக்கும் இருவருமே பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகளா?

பிரதீப் ரங்கநாதன் நடித்த இயக்கிய 'லவ் டுடே' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 150 கோடி ரூபாய் வசூல்

'தளபதி 69' படத்தை இயக்க போவது 'லியோ' நடிகரா? பரபரப்பு பேட்டி..!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் 'தளபதி 68' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை