மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் தமன்னா?

  • IndiaGlitz, [Friday,October 07 2016]

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தர்மதுரை' திரைப்படம் 50வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ள நிலையில் இன்று அவர் பிரபுதேவாவுடன் நடித்த 'தேவி' ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமன்னா மீண்டும் பிரபுதேவாவுடன் இணையவுள்ளதாகவும், ஆனால் இந்த முறை இருவரும் நடிப்பதற்கு பதிலாக இருவரும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரபுதேவா-தமன்னா இடையே காதலா? என இணையவாசிகள் கிசுகிசுவை கிளப்பி வரும் நிலையில் பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா தயாரிப்பு நிறுவனம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஷாலுடன் தமன்னா நடித்த 'கத்திச்சண்டை' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்த வருடம் 'பாகுபலி 2' மற்றும் சிம்புவுடன் தமன்னா நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

செளந்தர்யா ரஜினிகாந்த் படத்தில் தனுஷ் நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கவுள்ள இரண்டாவது படமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்கான் குமாரு' டிராக் லிஸ்ட்

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு வெகுவிரைவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

விஷால்-மிஷ்கின் படத்தில் இணைந்த கமல் மகள்

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி வருகிறார்.

தேவி - திரை விமர்சனம்

இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா ஆகியோர் இணைந்திருக்கும் ‘தேவி’,.