close
Choose your channels

செளந்தர்யா ரஜினிகாந்த் படத்தில் தனுஷ் நாயகி

Saturday, October 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கவுள்ள இரண்டாவது படமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் தனுஷின் முதல் பாலிவுட் படமான 'ராஜண்ணா' படத்தின் நாயகி சோனம் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனுஷும் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்றும் இதனால் ராஜண்ணா ஜோடியை மீண்டும் திரையில் ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இந்த படத்தில் மோகன்லால் மகன் பிரணவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.