பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,December 10 2017]

பிரபுதேவா, தமன்னா நடித்த' தேவி' கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது, 'யங் மங் சங்', 'மெர்க்குரி', 'குலேபகாவலி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபுதேவா நடிப்பில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'களவாடிய பொழுதுகள் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான நிலையில் பல்வேறு  காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் டிசம்பர் இறுதியில் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறிய தகவலை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா, பூமிகா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

More News

விமானத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை

இந்தியாவின் மிக அதிக வசூலை செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற அமீர்கானின் 'தங்கல்' படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்த நடிகை ஜைரா வாசிம்.

யூ-டர்ன் தமிழ் ரீமேக்கில் திடீர் மாற்றம்

கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய யூடர்ன் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'சைத்தான்' 'சத்யா' படங்களை இயக்கிய பிரதீப் இயக்கவுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தது.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்ப்படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் ஆளும் அரசே காரணம் என்று விஷால் தரப்பினர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில்

ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் ரத்தா? எஸ்.வி.சேகர் டுவீட்டால் பரபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்