close
Choose your channels

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, December 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா, தமன்னா நடித்த' தேவி' கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது, 'யங் மங் சங்', 'மெர்க்குரி', 'குலேபகாவலி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபுதேவா நடிப்பில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'களவாடிய பொழுதுகள்" திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான நிலையில் பல்வேறு  காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் டிசம்பர் இறுதியில் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறிய தகவலை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா, பூமிகா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.