பிரபுதேவாவின் 'ரேக்ளா' படத்தின் கதை இதுதானா?

  • IndiaGlitz, [Sunday,January 30 2022]

நடிகரும் நடன இயக்குனரும் இயக்குனருமான பிரபுதேவா சமீபத்தில் ‘ரேக்ளா’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும், இந்த திரைப்படத்தை சிபியின் ’வால்டர்’ திரைப்படத்தை இயக்கிய அன்பு என்பவர் இயக்குகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ரேக்ளா ரேஸ் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் அன்பு சில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ரேக்ளா ரேஸ் என்பது ஒரு பகுதி தான் என்றும் ஆனால் ரேக்ளா ரேஸ் குறித்த முழு படம் கிடையாது என்று கூறிய அவர், இது ஒரு க்ரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட படம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சனை, அந்த பிரச்சனையை அவன் எதிர்கொள்வது எப்படி என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் பிரபுதேவா கிராமத்து கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, மதுரை, கும்பகோணம் மற்றும் கோவா ஆகிய இடங்களில் நடைபெறும் என்றும் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.

More News

இந்த நால்வரில் ஒருவரா 'தளபதி 66' ஹீரோயின்? காதலர் தினத்தில் அறிவிப்பு!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

'அஜித் 61' படத்தில் மோகன்லால் இணைகிறாரா? ஆச்சரியமான தகவல்

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் மோகன்லால் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கமல்ஹாசனுடன் உரையாடும் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்: வைரல் வீடியோ

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் கமல்ஹாசனுடன் உரையாடும் காட்சி

தெலுங்கு திரையுலகிலும் கால் வைக்கும் ரெடின் கிங்ஸ்லி: எந்த படத்தில் தெரியுமா?

'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'டாக்டர்' திரைப்படத்தில் காமெடியில் கலக்கிய ரெடின் கிங்ஸ்லி தற்போது சுமார் 10 தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பதில் இவரா? விதி மாற்றப்படுகிறதா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.