close
Choose your channels

நீ பயப்பட்ற சரி, உன் ஆள் ஏண்டா பயப்பட்றா? 'கோமாளி' இயக்குனரின் 'லவ் டுடே' டிரைலர்

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தானே ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் ’லவ்டுடே’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா ஆகிய இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் நாயகியின் தந்தை சத்யராஜிடம் திருமணத்திற்கு அனுமதி கேட்கின்றனர். அப்போது சத்யராஜ், ‘ஒரே ஒரு நாள் உங்களுடைய செல்போன்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு நீங்கள் காதலில் உறுதியாக இருந்தால் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறுகிறார்.

அந்த ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தது? என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது? என்பதை காமெடி கலந்து ரொமான்ஸ் படமாக இயக்குனர் பிரதீப் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், ரவீனா, ஆஜித், உள்பட பலர் நடிப்பில் உருவாகி இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில், பிரதீவ் ராகவ் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.