தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான்: நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து

  • IndiaGlitz, [Sunday,May 05 2019]

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் நெட்டிசன்கள் கொந்தளித்து எழுந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோவில், 'டெல்லி பல்கலையில் தமிழ் மாணவர்கள் அதிக இடம் பிடித்துவிடுவதால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை மாற்றி டெல்லி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறினார். முதல்வரின் இந்த பேச்சுக்கு டெல்லி தமிழ் மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக டெல்லியில் பிரச்சாரம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், 'டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான் என்றும், தான் தமிழர் இல்லை என்றும் கன்னடன் என்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு அவரது நடிப்பை ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடராக இருக்கலாம், கன்னடம் உள்பட பல மொழிகளில் அவர் நடித்திருக்கலாம். ஆனால் தமிழ்ப்படங்களில் நடித்ததால் அவர் தென்னிந்திய அளவில் பிரபலமானார். அவர் தனது சொந்தப்படங்களையும் பெரும்பாலும் தமிழில்தான் தயாரித்தார். தமிழ்ப்படங்களில் நடித்ததால் அவர் கோடிகோடியாக சம்பாதிக்க முடிந்தது. அதனையெல்லாம் மறந்துவிட்டு தற்போது அவர் தமிழர்களுக்கு எதிராக பேசியுள்ளது வேதனையாக இருப்பதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி தமிழ் மாணவர் சங்கத்தலைவர் சரவண ராகுல் கூறியபோது, 'பிரகாஷ்ராஜ் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக பேசாமல் இருந்தால் கூட பரவாயில்லை, கல்வி கற்கும் மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

More News

இன்று நீட் தேர்வு: மாணவ, மாணவிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் இன்று ஒடிஷாவை தவிர நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

சரத்குமார், ராதாரவி கைதா? சென்னை ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு!

நடிகர் சங்க தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் இருந்தபோது நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை இருவரும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்றதாக

தேடி வந்த கனடா குடியுரிமை: ஏ.ஆர்.ரஹ்மானின் ஆச்சரியமான பதில்

பாலிவுட் நடிகர் அக்சயகுமார் சமீபத்தில் குடியுரிமை குறித்த சர்ச்சையில் சிக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

'தளபதி 63' படம் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்த நிலையில் இதுவரை

10 வருடத்திற்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த டெல்லி எஞ்சினியர்!

பள்ளிக்காலத்தில் பழகிய காதலியை பத்து வருடங்களுக்கு பின் சந்தித்த டெல்லியை சேர்ந்த எஞ்சினியர், காதலிக்காக தனது மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது