close
Choose your channels

வாடகைதாய் மூலம் பெற்ற இரட்டை குழந்தைகள்? புகைப்படம் வெளியிட்டு அசத்திய பிரபல நடிகை!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஒருவர் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘தில்சே’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இந்தத் திரைப்படம் ‘உயிரே’ எனும் பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘கல் ஹோ நா ஹோ’ போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருந்த அவர் கடந்த 2016 இல் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட் இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தொடர்ந்து திரைப்படத்திலும் கவனம் செலுத்திவந்த நிலையில் கடைசியாக 2018 இல் ‘பயாஜி’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அதேபோல ஐபிஎல் போட்டிகளுக்கான பஞ்சாப் அணி உரிமையாளராகவும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தொடர்ந்து ரசிகர்களிடையே கவனம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் 46 வயதில் இரட்டை குழந்தைக்கு தாயாகி இருப்பதும் ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும் அவருடைய குழந்தைக்கு ஜெய் ஜிந்தா குட் இனஃப் என்றும் பெண் குழந்தைக்கு ஜியா ஜிந்தா குட் இனஃப் என்றும் பெயர் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவில் தனது கணவர், 2 குழந்தைகளுடன் வசித்துவரும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதற்குள் எவ்வளவு வளர்ந்து விட்டார்கள்என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஹாலிவுட்டில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா நடிப்பைத் தவிர கிரிக்கெட்டிலும் தீராக ஆர்வம் கொண்டிருந்தார். தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டுவரும் நிலையில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.