என்ன சொல்ல வர்ற.. ஒண்ணுமே புரியலையே.. பிரேம்ஜியின் 'சத்திய சோதனை' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,February 24 2023]

நகைச்சுவை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ’சத்திய சோதனை’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிரேம்ஜி அமரன், பிக்பாஸ் ரேஷ்மா, கேஜி மோகன், செல்வம் முருகன், லட்சுமி உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கி உள்ளார். ஏற்கனவே ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுராம் இசையில் சரண் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்ற பிரேம்ஜி காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார் என்பதும் அதிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பதுதான் இந்த படத்தின் நகைச்சுவையான கதை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக அவலங்களை வெளிப்படுத்தும் கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? என்ன கேரக்டர் தெரியுமா?

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'காதல் கொண்டேன்' 'புதுப்பேட்டை' 'மயக்கம் என்ன' உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் செல்வராகவன்

சிம்புவின் வருங்கால மனைவி இலங்கை தமிழ்ப்பெண்ணா? எப்போது திருமணம்?

நடிகர் சிம்புவின் வருங்கால மனைவி இலங்கை தமிழ் பெண் என்றும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் 'ஏகே 62' படத்தின் டைட்டில் இதுவா? 'லியோ'வுக்கு போட்டியா?

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும்

ஜோதிகாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா? புதிய போஸ்டர் ரிலீஸ்..!

 மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிகை ஜோதிகா நடித்த 'காதல்' என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

'வாரிசு' படத்தில் ஒரு காட்சியில் கூட இல்லை.. ஆனால் குஷ்புவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் குஷ்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்ததாக கூறப்பட்டாலும் படம் வெளியான பிறகு அவர் நடித்த ஒரு காட்சி கூட படத்தில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு