close
Choose your channels

1998ஆம் ஆண்டில் அவரும் நானும்.. பிரேம்ஜி மனைவி இந்துவின் இன்ஸ்டா போட்டோ வைரல்..!

Monday, June 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கடந்த சில நாட்களுக்கு முன் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம். மேலும் கடந்த சில ஆண்டுகளாக தான் இருவரும் காதலித்தார்கள் என்று கூறப்பட்ட நிலையில் 24 வருடங்களுக்கு முன் அதாவது 1998 ஆம் ஆண்டு பிரேம்ஜி மற்றும் இந்துவின் புகைப்படத்தை இந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேம்ஜி மனைவி இந்து வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிவதாகவும் இருவரும் சில ஆண்டுகள் காதலித்த நிலையில் அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிரேம்ஜி மனைவி இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1998 ஆம் ஆண்டு எடுத்த பிரேம்ஜியின் புகைப்படத்தை பதிவு செய்தார். அதேபோல் அதே ஆண்டில் தான் சிறு பெண்ணாக இருக்கும் புகைப்படங்களின் பதிவு செய்த நிலையில் ’நாம் இருவரும் இதற்கு முன்பே என் சந்திக்காமல் போய்விட்டோம்’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கு முன் பிரேம்ஜி மற்றும் இந்து இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பல காமெடியான கமெண்ட்ஸ்களும் இந்த புகைப்படங்களுக்கு பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment