5வது பிறந்த நாளை கொண்டாடிய அட்லி - ப்ரியா அட்லி: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 07 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி மற்றும் அவரது மனைவி பிரிப்ரியா அட்லி தாங்கள் செல்லமாக வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டியின் ஐந்தாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’ராஜாராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லி அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அட்லி மற்றும் ப்ரியா அட்லி ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர்கள் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இருவருக்கும் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல நாய்க்குட்டியின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

அட்லி மற்றும் ப்ரியா அட்லி தங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 98 

முன்னாள் காதலனுடன், கள்ளக்காதல்....! கணவரை கொல்ல தோழன் முயற்சி...!

தன்னுடைய முன்னாள் காதலனுடன், கள்ளக்காதல் வைத்துக்கொண்ட சிறுமி, கணவரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

சரத்குமார் நடிக்கும் முதல் வெப்சீரிஸ்: தயாரிப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா?

திரை உலகில் பல்வேறு சாதனைகள் செய்த நடிகர் சரத்குமார் முதல் முதலாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு வெப்தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடர் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ஒயிட் காஸ்ட்யூமில் ஐஸ்வர்யா தத்தாவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரூ.96,700 மதிப்புள்ள ஏசி வெறும் ரூ.5900: அமேசானில் ஆர்டர் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமேசான் இணையதளத்தில் ரூ.96,700 என்ற விலைக்கு விற்க வேண்டிய ஏசி ரூ.5900 என்ற விலைக்கு விற்பனை என அறிவித்துள்ளதை அடுத்து அந்த ஏசியை பலரும் ஆர்டர் செய்தனர்.