பிரதமர் பாராட்டிய பிரியாமணி நடித்த படம்.. வளைகுடா நாடுகளில் தடை..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

நடிகை பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பிரதமர் மோடி அவர்களும் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பிரியா மணி மற்றும் யாமி கவுதம் முக்கிய கேரக்டர்களில் நடித்த ’ஆர்ட்டிகிள் 370’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆர்ட்டிகிள் 370’ திரைப்படத்தை தடை செய்வதாக வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்த ’ஃபைட்டர்’ திரைப்படமும் சில காரணங்களுக்காக தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் பாராட்டிய ஒரு திரைப்படத்தை வளைகுடா நாடுகள் தடை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அட்லியிடம் இருந்து தான் இதை கற்று கொண்டேன்.. ஷாருக்கான் பதிவுக்கு அட்லி பதில் என்ன தெரியுமா?

'அட்லியிடம் இருந்து தான் இதை நான் கற்றுக் கொண்டேன்' என ரசிகர் ஒருவர் கேள்விக்கு ஷாருக்கான் பதில் அளித்த நிலையில் அட்லி அதற்கு 'உங்களிடம் இருந்துதான் நான் தினம் தினம் பல விஷயங்களை கற்று

என்னால ஏத்துக்கிடவே முடியல.. 50 ரூபாய் செலவுல வேலையில முடிச்சிறாங்க..! ' 'இரவின் நிழல்' நடிகை..!

வெறும் ஐம்பது ரூபாய் சோப்பு போட்டு குளித்து புத்துணர்ச்சி ஆகிவிடுகிறார்கள், ஆனால் நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எங்களால் அந்த மாதிரி ஆக முடியவில்லை

6000 ஆண்டுகளில் நடக்கும் கதை.. கமல்ஹாசன் படம் குறித்து இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி 6000 ஆண்டுகள் நடைபெறும் கதை அம்சம் கொண்டது என்று அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளது

அடுத்தடுத்து விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த இளைய தளபதியா?

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே விஜய் படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இன்னொரு விஜய் பட இயக்குனரையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.3 கோடி மதிப்புள்ள பிறந்த நாள் கேக் வெட்டிய 'லெஜண்ட்' பட நடிகை.. பரிசளித்த பாடகர்..!

தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த 'லெஜண்ட்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய