ஒருநாள் என் மகள் அமெரிக்காவில் ஓட்டு போடுவார்: கமலா ஹாரிஸை சந்தித்த விஜய் பட நடிகை!


Send us your feedback to audioarticles@vaarta.com


என் மகள் ஒருநாள் அமெரிக்காவில் ஓட்டு போடுவார் என விஜய் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலின் போது அவர் பெண்களின் வாக்குரிமை, கருக்கலைப்புச் சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரியங்கா சோப்ரா ’உலகம் பல ஆண்டுகளாக பெண்களின் சக்தியை குறைத்து மதிப்பிட்டது என்றும் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தார்கள் என்றும் ஆனால் தற்போது பெண்களின் உறுதி மற்றும் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் நாம் செயல்படக்கூடிய இடத்தில் இருக்கிறோம் என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும் கமலா ஹாரீஸ் அவர்களுடன் நடத்திய உரையாடலில் பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன என்பது மனிதகுலம் மிகப்பெரிய சவால்களை சந்தித்து இருக்கும் இந்த நேரத்தில் பெண்கள் மனித குலத்தை காக்கும் முக்கிய பங்காக இருப்பார்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் என்னால் வாக்களிக்க முடியாது என்றாலும் என் கணவர் வாக்களிப்பார் என்றும் ஏன், ஒருநாள் என் மகளும் வாக்களிக்க முடியும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
கமலா ஹாரிஸ் உடனான எனது உரையாடல் மிகவும் அழுத்தமான பிரச்சனைகளை மையமாக கொண்டு இருந்தது என்றும் அதை தீர்ப்பதற்கு தெளிவான பார்வையும் திட்டமும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments