close
Choose your channels

'நளதமயந்தி' சீரியல் விவகாரம்.. வதந்தி உண்மையாயிருச்சே.. பிரியங்கா நல்காரி பொய் சொன்னாரா?

Friday, May 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ தமிழ் சேனலில் ‘நளதமயந்தி’ என்ற சீரியலில் நடித்து வந்த பிரியங்கா நல்காரி அந்த தொடரில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்ட நிலையில் தான் அந்த தொடரில் இருந்து விலகவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் ‘நளதமயந்தி’ சீரியலில் இருந்து பிரியங்கா விலகப் போகிறார் என்று பரவிய வதந்தி தான் தற்போது உண்மையாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீ தமிழ் சேனலில் ஏற்கனவே ’சீதாராமன்’ என்ற சீரியலில் பிரியங்கா நடித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து ‘நளதமயந்தி’ சீரியலில் நடித்து வந்த நிலையில் தற்போது அந்த சீரியலில் இருந்தும் அவர் விலக போவதாகவும் அவருக்கு பதில் ஸ்ரீநிதி நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் மலேசியாவில் தனது கணவருடன் இன்பச் சுற்றுலா சென்று இருந்த பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நளதமயந்தி’ சீரியலில் இருந்து தான் விலகப் போவதாக பரவி வரும் செய்தி வதந்தி என்றும் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன்’ என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ‘நளதமயந்தி’ சீரியலின் கதை சென்று கொண்டிருப்பதை பார்க்கும் போது அவரது கேரக்டர் முடிவடைந்தது போல் தெரிகிறது. அதனால் பிரியங்கா மீண்டும் இந்த தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘நளதமயந்தி’ சீரியலில் புதிதாக நான் என்ட்ரி ஆகியுள்ள ஸ்ரீநிதி இடம் இது குறித்து கேட்டபோது ’என்னை சிறப்பு தோற்றத்துக்காக இந்த சீரியலில் நடிக்க அழைத்தார்கள், ஆனால் எனக்கு பிரியங்கா கேரக்டர் தானா என்பது எனக்கு தெரியாது, விரைவில் படப்பிடிப்புக்கு நடக்கும் போது எனக்கு என்ன கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள் என்பதை சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பொதுவாக வதந்திகளுக்கு தான் நடிகர் நடிகைகள் விளக்கம் அளிப்பார்கள் என்று கூறப்படும் நிலையில் பிரியங்கா நல்காரி விஷயத்தில் வதந்தி தான் உண்மை ஆகி உள்ளது என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment