close
Choose your channels

விஜய்யின் 'கில்லி' பட ரீ ரிலீஸ் தகவலில் உண்மையில்லை: ஏ.எம். ரத்னம்..!

Wednesday, February 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் அந்த படங்களுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரீ ரிலீஸ் பட்டியலில் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கில்லி படமும் அதில் ஒன்றாக உள்ளது.

‘கில்லி’ திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கில்லி திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

'கில்லி’ ரீ ரிலீஸ் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மை அல்ல என்றும் அதை யார் அப்படி பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை என்று கூறிய ஏஎம் ரத்தினம் ’கில்லி ’படத்தை ரீ ரிலீஸ் செய்வது உறுதி தான் என்றாலும் தேதியை இனிமேல் தான் முடிவு செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்

மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய யோசித்து வருகிறோம் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிப்போம் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் ’கில்லி’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.