சிம்புவின் 'கொரோனா குமார்' படம் என்ன ஆச்சு? தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தகவல்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதேபோல் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் என்ன? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் கொரோனா குமார்’ படம் விரைவில் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கொரோனா குமார்’ படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொரோனா குமார்’ குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா குமார்’ படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் கொரோனா குமார்’ கண்டிப்பாக வருவார் என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’பத்து தல’ படத்தை முடித்தவுடன் கொரோனா குமார்’ படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிம்புவின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News

பான் இந்திய படைப்பாக உருவாகும் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'

நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கிளியை வளர்த்து பன்னிகிட்ட கொடுத்துட்டிங்க... ரவீந்தர் - மஹாலட்சுமி திருமணம் குறித்து காஜல் கடும் கண்டனம்!

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலட்சுமி திருமணம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்கள் செய்துவரும் நிலையில் தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களுக்கு பிக்பாஸ் நடிகை காஜல்

சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைகிறார் 'விக்ரம்' பிரபலம் ஏஜண்ட் டீனா!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் நடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு சென்ற பிரபல இயக்குனரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல இயக்குனரின் படத்தையும் ரிலீஸ் செய்ய

பொன்னியின் செல்வன்: விக்ரம் பிரபு, பிரபு, லால் கேரக்டர்களின் அட்டகாசமான போஸ்டர்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் பிரம்மாண்டமாக செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும்