close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு 2': சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.85 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் கூறப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எதிர்பார்ப்பை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்


இந்த நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் வாக்களிக்க வந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை தெரிவித்தார். ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை இயக்குனர் கௌதம் மேனன் எழுதி வருவதாகவும் அவர் திரைக்கதை எழுதும் பணி முடிந்தவுடன் அந்த படம் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அறிமுக இயக்குனர்களுக்கு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் அதிகமாக வாய்ப்பு கொடுத்து வருகிறது என்றும் குறிப்பாக பிரதீப் ரங்கநாதன், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நிறுவனத்தில் தான் இயக்குனர்களாக அறிமுகமானார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment