என் படத்தையும் பாருங்க! தியேட்டர் வாசலில் கெஞ்சிய தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

ஒவ்வொரு வெள்ளியன்றும் நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியானபோதிலும், டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டும் பார்த்துவிட்டு மற்ற படங்களை பார்க்காமல் விட்டுவிடுகின்றனர். அல்லது இணையதளத்தில் பார்த்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இன்று விஷாலின் 'அயோக்யா' உள்பட ஐந்து படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஒருசில பிரச்சனை காரணமாக 'அயோக்யா' ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் இன்று வெளியான படங்களில் 'எங்கு சென்றாய் என் உயிரே' என்ற படமும் ஒன்று ஆகும்.

இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆர்.வி.பாண்டி என்பவர் இன்று திரையரங்கு ஒன்றின் வாசலில் நின்று ரசிகர்களிடம் எனது படத்தையும் பாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடி டிக்கெட்டை தனது சொந்த காசில் வாங்கி குறைந்த விலைக்கு தந்துள்ளார். மேலும் படம் பிடிக்கவில்லை என்றால் ரூ.100 தருவதாகவும் டிக்கெட் வாங்கியவர்களிடம் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஒரு தயாரிப்பாளர் இந்த அளவுக்கு இறங்கி வந்து ரசிகர்களிடம் கெஞ்சுவதை பார்த்து ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

More News

'பிக்பாஸ்3'யில் நான் இல்லை: பிரபல நகைச்சுவை நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பப்படவுள்ளது.

என் பாடல்களில் ஆபாசமா? புஷ்பவனம் குப்புசாமிக்கு செந்தில் பதிலடி!

ஒரே துறையில் பிரபலமாக இருப்பவர்களிடையே போட்டியும் பொறாமையும் ஏற்படுவது உலகம் முழுவதும் உள்ள ஒரு வழக்கமான நிலை ஆகும்.

விஷால்-அனிஷா திருமண தேதி!

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது

டெல்லி ஜெனரேட்டாலும் தமிழக அரசை சரி செய்ய முடியாது: கமல்ஹாசன்

மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டிருந்தபோது ஜெனரேட்டரும் பழுதானதால் ஐந்து நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்

பிரபல நடிகரின் 2 வயது மகள் எதிர்பாராத விபத்தில் மரணம்!

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் பிரதீஷ் வோராவின் இரண்டு வயது மகள் எதிர்பாராத நடந்த ஒரு விபத்தில் பரிதாபமாக மரணம் அடைந்தார்.