கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் விபச்சார புரோக்கர்கள்! 1 மணி நேரத்திற்கு, 10 ரூபாய்! அதிர வைக்கும் தகவல்!

  • IndiaGlitz, [Friday,May 17 2019]

பார்ட் டைம் என்கிற பெயரில் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளையும் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் மாணவிகளையும் குறிவைத்து, ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் ஆன்லைன் மூலமாக சிலர் விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பின் மும்பை ஹாட் காலெக்ஷன் டாட் காம் என்கிற பெயரில், இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த வெப்சைட்டில் உள்ள எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் மிஸ்ட் கால் கொடுத்தால் உடனே அவர்களுடைய போனுக்கு ஒரு மெசேஜ் வரும். அவர்களுக்கு எந்தப் பெண் வேண்டும், எவ்வளவு கட்டணம், உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

இந்த கும்பலை வளைத்துப் பிடிக்க போலீசார் 2 பேரை டம்மியாக நடிக்கவைத்து, தனியார் ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து விபச்சாரத்திற்காக பெண்களுடன் வந்த 2 புரோக்கர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில். மும்பை மட்டுமல்லாது, சென்னை, கொல்கத்தா, உள்ளிட்ட பல பகுதிகளில் கல்லூரி மாணவிகளின் பார்ட் டைம் என்கிற பெயரில் விபச்சாரத்தில் இந்த கும்பல் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும் புரோக்கர்களுடன் வந்த இரண்டு பெண்களும் கல்லூரி மாணவிகள் என்றும் உறுதியானது. இந்த ஆன்லைன் கும்பல் பெரும்பாலும், வெளியூர்களிலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் கல்லூரி மாணவிகளையும், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிகளையும், பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது என்றும், இதில் இன்னும் யார் யார் இருக்கின்றனர், என அடுத்த கட்ட விசாரணையை தீவிர படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

More News

தோனிக்கு அவுட் கொடுத்ததால் கதறி அழுது நடுவரை திட்டி தீர்த்த சிறுவன் செய்த நெகிழ்ச்சியான செயல்!

கடந்த 12ஆம் தேதி, ஹைதராபாத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ்

இன்று கமல் பிரச்சாரம் நடக்குமா? போலீஸ் அனுமதி மறுப்பு!

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு பின்னர் அவரது தேர்தல் பிரச்சாரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதால் இன்று அவருடைய சூலூர் பிரச்சாரத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

கமல் கூட்டத்தில் கல், முட்டை வீச்சு! பெரும் பரபரப்பு

நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவரை நோக்கி மர்ம நபர்கள் சிலர் காலணியை வீசிய நிலையில்

வெயிலின் கொடுமைக்கு பலியான விஜய்சேதுபதி பட நடிகர்!

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அக்னிநட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஐதராபாத்தில் விஜய்சேதுபதியின் படத்தில் நடித்து வரும் ரஷ்யா நடிகர் ஒருவர் வெயிலின்

'தளபதி 64' படத்தில் இணைந்த பெண் இயக்குனர்?

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 64' திரைப்படத்தை 'மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.