close
Choose your channels

வெயிலின் கொடுமைக்கு பலியான விஜய்சேதுபதி பட நடிகர்!

Friday, May 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அக்னிநட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஐதராபாத்தில் விஜய்சேதுபதியின் படத்தில் நடித்து வரும் ரஷ்யா நடிகர் ஒருவர் வெயிலின் கொடுமையால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சிரஞ்சீவி, விஜய்சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, அமிதாப்பச்சன் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் திரைப்படம் 'சயிர நரசிம்மரெட்டி. இந்த படத்தில் ஒருசில வெளிநாட்டு நடிகர்கள் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர். இவர் தனது நண்பர் போரேஸ் என்பவருடன் தங்கியிருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ஐதராபாத்தில் சைபர் சிட்டி அருகே நேற்று அலெக்சாண்டர் மயங்கிய நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டார். உடனே அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் வெயிலின் வெப்பத்தால் அவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய செல்போனில் இருந்த தகவலை அடுத்தே அவர் 'சயிர நரசிம்ம ரெட்டி' படத்தில் நடித்து வருபவர் என தெரிய வந்தது. இதனையடுத்து படக்குழுவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவரது உடல் ரஷ்யாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.