250 மூட்டைகள் அரிசி வழங்கி உதவி செய்த P.T.செல்வகுமார்

  • IndiaGlitz, [Friday,April 10 2020]

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடக்கியிருக்கும் ஏழை மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது. ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கபட்ட நபர்களுக்கு முதன்முதலில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் T.ராஜேந்தர் தலைமையில் அனுப்பியதுடன் பட்டுக்கோட்டையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் முன்னினையில் 100 பசுங்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி வல்லத்தில் வைரமுத்து தலைமையில் 1002 ஆட்டு குட்டிகள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இப்போது கடந்த 4 நாட்களாக கொரானவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கின்ற வட மாநில தொழிலாளர்கள், இருளர் இனத்தவர்கள், ஆந்திரா கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பர்மா அகதிகள் என அனைவருக்கும் சுமார் 250 மூட்டைகள் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் முககவசங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்க நிறுவுனர், தலைவர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் P.T.செல்வகுமார் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலப்பை மாநில ஒருங்கிணைப்பாளர் V.K.வெங்கடேசன், கிராம அதிகாரி பொன்னுதுரை, சமூகஆர்வலர் வேந்தரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.

More News

மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை

உலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் தங்களது மக்களை ஊரடங்கில் இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

நலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் வறுமையில் வாடுவதால் நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி, நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கு

மோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு? பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி 

24 மணி நேரமும் பிசியாக இருந்த பலர் தற்போது அதே 24 மணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கின்றனர். வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்

கொரோனா தடுப்பு நிதியாக மத்திய மாநில அரசுகளுக்கு தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்து வரும்