'புலி' படத்தில் நடித்த பிரபல நடிகர் விவாகரத்து?
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட சூப்பர் ஸ்டாரும் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் வில்லன் நடிகருமான சுதீப் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சுதீப்பும் அவருடைய மனைவி ப்ரியா ஆகிய இருவரும் இணைந்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
சுதீப்-ப்ரியா திருமணம் கடந்த 2001ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்றது. இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு சான்வி என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 14 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சுதீப் தனது மனைவி ப்ரியாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.19 கோடி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுதீப்-ப்ரியாவின் மகள் சான்வி, மைனர் என்பதால் ப்ரியாவிடமே இருக்கவும் சுதீப் சம்மத்தித்துள்ளதாகவும் தெரிகிறது.
'புலி' படத்தை அடுத்து சுதீப் தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments