மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் நீட்டிக்க வேண்டும் என கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்தில் கூட ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலமும் மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பை அடுத்து மேலும் சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 8 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உலகம்; ஊரடங்கு உத்தரவில் நசுக்கப்பட்ட பலரது மனிதஉரிமைகள்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் தங்களது மக்களை ஊரடங்கில் இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

நலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் வறுமையில் வாடுவதால் நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி, நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கு

மோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு? பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி 

24 மணி நேரமும் பிசியாக இருந்த பலர் தற்போது அதே 24 மணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கின்றனர். வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்

கொரோனா தடுப்பு நிதியாக மத்திய மாநில அரசுகளுக்கு தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்து வரும்

பிறந்த குழந்தைக்கும் முகக்கவசங்கள்!!!

கொரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது