ஆடு, மாடு, நாய் வளர்த்தால் வரி: முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

இந்தியாவில் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, வாட் வரி, அந்த வரி, இந்த வரி என மக்களை வரிகளால் உறிஞ்சி எடுத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் தற்போது வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கும் வரி கட்ட வேண்டும் என்ற புதிய முறை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வரி பஞ்சாப் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, பன்றி, ஆடு, மான் போன்ற விலங்குகளுக்கு வருடம் ரூ.250 வரியும், எருமை, காளை, ஒட்டகம், குதிரை, பசு, யானை போன்ற விலங்குகளுக்கு ரூ.500 வரியும் கட்ட வேண்டுமாம்.

ஒவ்வொரு விலங்கிற்கும் கோட் நம்பருடன் கூடிய சிப் பொருத்தப்படும் என்றும் அதன்படி ஒவ்வொரு ஆண்டும் வளர்க்கும் விலங்குகளுக்குரிய லைசென்ஸை புதுப்பித்துவிட்டு வரி கட்ட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வரி நாடு முழுவதும் விதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்று நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.

More News

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி: அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்

திரைப்படங்கள் வெளியாகும் போதும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டங்களின் போதும் தவறாமல் இடம்பெறுவது பேனர்.

இயக்குனர் ஐவி சசி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

ஐ.வி.சசி இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியை சற்றுமுன்னர் பார்த்தோம். ஐவி சசியின் மறைவிற்கு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி தெரிவித்தும் நேரில் இறுதி மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

நடிகர் மாதவன் வாங்கிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள பைக்

நடிகர் மாதவன் மோட்டார் சைக்கிள் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று இந்தியன் ரோட்மாஸ்டர் என்று கூறப்படும் பைக்கை வாங்கியுள்ளார்.

ரஜினியின் '2.0' இசைவெளியீட்டு விழா! துபாய் அரசர் கலந்து கொள்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

என்னங்க சார் உங்க நியாயம்: பாஜகவினர்களுக்கு பிக்பாஸ் ஆர்த்தி கேள்வி

நகைச்சுவை நடிகையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது அரசியல் நையாண்டி கருத்துக்களை கூறி வரும் நிலையில்