'புஷ்பா 2' படத்தின் 'ஓ சொல்றியா' பாடலில் சமந்தா இல்லையா? அப்ப வேற யாரு?

  • IndiaGlitz, [Wednesday,March 23 2022]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருந்தார் என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே நடிகை சமந்தா ரூபாய் 5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெற உள்ளதாகவும் ஆனால் இந்த பாடலில் சமந்தா நடனம் ஆட போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ’புஷ்பா’ படத்திலும் திஷா பதானிக்குத்தான் இந்த பாடலில் நடனம் ஆட வாய்ப்பு வந்தது என்பதும், ஆனால் திஷா ஆட மறுத்து விட்டதை அடுத்தே சமந்தா நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது பாகத்தில் நடனம் ஆட திஷா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு திடீரென கிளம்பிய எதிர்ப்பு: படக்குழுவினர் அதிர்ச்சி!

பிரமாண்ட இயக்குனர் ஆர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்'  என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது

மெக்சிகோவில் த்ரிஷா: வேற லெவல் வீடியோ வைரல்

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும் அவர் தற்போதும் இளம் நடிகைகளுக்கு இணையாக 'பொன்னியின் செல்வன்

'ஜென்டில்மேன்  2' படத்தில் நயன்தாரா இல்லை, ஆனால் நயன்தாரா தான்! கேடி குஞ்சுமோன் அறிவிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சூப்பர் ஹிட் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தில் முக்கிய வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு

நடிகை ஆண்ட்ரியாவிற்குக் கிடைத்த புது கவுரவம்… வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையாவிற்கு ஐக்கிய அரபு

திடீரென தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா… என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.