close
Choose your channels

மெக்சிகோவில் த்ரிஷா: வேற லெவல் வீடியோ வைரல்

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும் அவர் தற்போதும் இளம் நடிகைகளுக்கு இணையாக ’பொன்னியின் செல்வன்’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்றும் அதில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் மெக்சிகோ நாட்டில் தனது தோழிகளுடன் இருக்கும் வேற லெவல் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் பின்னணியாக உலகப் புகழ்பெற்ற ‘இமிலியானா’ என்ற பாடலையும் அவர் பதிவு செய்துள்ளார் .

இந்த நிலையில் நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், ராம், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.