பாட்டியுடன் “புஷ்பா“ பாடலுக்கு நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ!


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும் ஆல்ரவுண்டராகவும் இருந்துவரும் ஹர்திக் பாண்டியா தனது பாட்டியுடன் இணைந்து “புஷ்பா“ திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகர் அல்லுஅர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா“ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துவருகிறது. இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “உம் சொல்றியா மாமா“, “ஹே சாமி“, “ஸ்ரீவள்ளி“ என அனைத்துப் பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனால் சோஷியல் மீடியாவைத் திறந்தாலே இந்தப் படத்தின் பாடல்களுக்கு ரீல்ஸ்கள் குவிந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் புஷ்பா படத்தின் பாடல்களுக்கு சினிமா பிரபலங்களும் அடிமையாகி ரில்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர்களும் சளைத்துவிடவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் அவருடைய மகள்களும் புஷ்பா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து இந்திய வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் நடிகர் அல்லுஅர்ஜுனின் கெட்டப்பில் வந்து அசத்திய வீடியோக்களும் ரசிகர்களை வியக்க வைத்தது.
இதுமட்டுமல்லாது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான டுவைன் பிராவோ புஷ்பா பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டு அசத்தினார். அதோடு பங்களாதேஷில் நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியின்போது களத்திலேயே அவர் புஷ்பா ஸ்டெப்பை போட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த வரிசையில் தற்போது ஆல்ரவுண்டர் பாண்டியாவும் இணைந்துள்ளார். அவர் தனது பாட்டியுடன் சேர்ந்து ஸ்ரீவள்ளி பாட்டுக்கு ஸ்டெப் போட்ட வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments