நிருபரின் ஜாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமி: செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,May 28 2019]

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவரின் பெயர் என்ன? ஊர் என்ன? ஜாதி என்ன? என்று கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனக்கு வாக்களித்த அனைத்து சமுதாய மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்ட அவர், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். மேலும் தனது பேட்டியின் இடையே மோடி செய்த நன்மைகளை ஊடகங்கள் மறைத்துவிட்டு, அவர் குறித்து எதிர்மறையாகவே செய்தி வெளியிடுவதாகவும் அதனால்தான் பாஜக கூட்டணி தமிழகத்தில் தோல்வி அடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதனால் செய்தியாளர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆவேசமாக கேள்வி எழுப்பிய ஒரு நிருபரை நீ எந்த பத்திரிகை? எந்த ஊர்? உன் ஜாதி என்ன? என்று ஒருமையிலும் அநாகரீகமாக கேட்க தொடங்கியதால் பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது

More News

ஒன்றரை கோடி ரூபாயை சென்னை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்!

சென்னை சாலை ஒன்றில் நள்ளிரவில் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மர்ம நபர் ஒருவர் சாலையில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பேயுடன் காதல் திருமணம்! இப்போது விவாகரத்து! அதிரவைக்கும் காரணம்!

அயர்லாந்து நாட்டை சேந்த பெண் ஒருவர், ஹாலிவுட் திரைப்படமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்" திரைப்படத்தில் வரும் ஜாக் ஸ்பேரோ என்கிற காதாபாத்திரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு...

கமல்ஹாசன் பெற்ற ஓட்டுக்கள் குறித்து ரஜினிகாந்த் கருத்து!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 4% வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும்

திரையரங்கு உரிமையாளர்களின் அதிரடி முடிவு: கமல், விஷால், கார்த்தி ஏற்பார்களா?

திரையரங்கு உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் வசூல் தொகையை விநியோகிஸ்தர்களுக்கு பிரித்து கொடுப்பது குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

தமிழகத்தில் மோடி தோல்வி ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது.