close
Choose your channels

திரையரங்கு உரிமையாளர்களின் அதிரடி முடிவு: கமல், விஷால், கார்த்தி ஏற்பார்களா?

Tuesday, May 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையரங்கு உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் வசூல் தொகையை விநியோகிஸ்தர்களுக்கு பிரித்து கொடுப்பது குறித்த பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 60% தொகையும் மற்ற சென்டரில் 65% தொகையும் வழங்கப்படும். இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 55% தொகையும் மற்ற சென்டரில் 60% தொகையும் வழங்கப்படும்

மேலும் சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 55% தொகையும் மற்ற சென்டரில் 60% தொகையும் வழங்கப்படும். இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 50% தொகையும் மற்ற சென்டரில் 55% தொகையும் வழங்கப்படும்

மற்ற நடிகர்களுக்கு முதல் வாரத்தில் அனைத்து சென்டர்களுக்கும் 50% தொகையும் இரண்டாவது வாரத்தில் 45% தொகையும் மற்ற சென்டரில் 60% தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்களான கமல், கார்த்தி, விஷால், விக்ரம் போன்ற நடிகர்கள், மற்ற நடிகர்களின் பட்டியலில் வருவதால் இதனை அவர்கள் ஏற்று கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.