பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடும் தீபிகா படுகோன்: வெற்றி பெற்றது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து அவர்கள் சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக்கப்பட இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை தீபிகா படுகோன் தயாரித்து சிந்து கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் பிவி சிந்து உடன் தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதில் தீபிகா, ‘உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வரும் சிந்துவுடன் நான் விளையாடி வருகிறேன் என்று கூறியுள்ளார். இது குறித்து பிவி சிந்து கூறியபோது ’ஒருவேளை தீபிகா படுகோனே ஒரு பேட்மிட்டன் வீராங்கனை ஆக வந்திருந்தால் நிச்சயம் டாப் வீராங்கனையாக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்
இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments