close
Choose your channels

பிறந்த நாளில் செம்ம கிளாமர்.. பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமியின் 'பயர்' வீடியோ..!

Thursday, April 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது செம்ம கிளாமர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சரவணன் மீனாட்சி’ உட்பட சில சீரியல்களில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் என்பது தெரிந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் காரணமாக தற்போது சில திரைப்படங்களில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வரும் நிலையில் நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் என்பதும் அவை வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘பயர்’ என்ற திரைப்படத்தின் டீசர் நேற்று அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வெளியாகி உள்ள நிலையில் அதில் செம்ம கிளாமரில் ரச்சிதா இருக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா , சாக்சி அகர்வால், சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை ஜேஎஸ்கே இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டிகே இசையில், சதீஷ் ஒளிப்பதிவில், பிரேம்குமார் தொகுப்பில் உருவான இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.