close
Choose your channels

எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க.. ராதிகா மகள் தேர்தல் பிரச்சார வீடியோ..!

Wednesday, April 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராதிகாவின் மகள் ரியா ராதிகா தனது அம்மாவுக்கு வாக்கு கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ’அம்மா விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி போடறாங்க, அவங்களுக்கு உங்கள் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களோடு கூட இருந்து, உங்களுக்கு தேவையானதை அம்மா நிறைவேற்றி வைப்பார்கள். உங்களுக்காக உழைக்க ஒரு சந்தர்ப்பமும் கொடுங்கள், தாமரை சின்னத்திற்கு வாக்களித்து ராதிகா சரத்குமார் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று ரியா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ரியா ராதிகா சரத்குமார் மற்றும் விருதுநகர் தொகுதியில் ராதிகாவை எதிர்த்து போட்டியிடும் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.