கொரோனா பாதிப்பு குறித்து ராதிகா சரத்குமார் விளக்கம்!

நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நேற்று செய்திகள் வெளியான நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் காசோலை மோசடி வழக்கில் சிக்கிய ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் அதன் பின் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் ஆஜராகவில்லை என்று அவரது தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து ராதிகா விரைவில் குணமடைய வேண்டுமென கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரனோ பாதிப்பு இல்லை என்றும் தனக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தான் இரண்டாவது தடுப்பூசி டோஸ் எடுத்துக் கொண்டதில் தனக்கு உடம்பு வலி மட்டும் தான் இருக்கிறது என்றும் தற்போது அதுவும் சரியாகி விட்டதால் பணியை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

குட்டி விஜய்சேதுபதிக்கு கார் பரிசளித்த லோகேஷ் கனகராஜ்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

சம்மரில் மஞ்சளில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்: 5 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸ்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்திசுரேஷ், தற்போது ரஜினியின் 'அண்ணாத்த' செல்வராகவனின் 'சாணிக்காகிதம்'

தேர்தல் தோல்வி பயம்...ஜாதிப்பாகுபாடு....! அநியாயமாக கொலையுண்ட 2 இளைஞர்கள்...!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், அநியாயமாக இரு இளைஞர்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'குக் வித் கோமாளி' சீசன் 3: குக்-கள், கோமாளிகள் யார் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கனி வின்னராகவும்

தமிழகத்தில் ஊரடங்கா...! விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன...?

தமிழகத்தில்  கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளது.