உங்க பிரச்சனை தீர்றதுக்கு அதைவிட பிரச்சனையான இடத்துக்கு வந்துருக்கிங்க.. 'சந்திரமுகி 2' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சந்திரமுகி 2’. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த டிரைலரில் இருக்கும் பிரமாண்டமான காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் வெற்றி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் வடிவேலு காமெடியுடன் தொடங்கும் இந்த படத்தில் சந்திரமுகி இருந்த பங்களாவுக்கு ராகவா லாரன்ஸ் குடும்பத்தோடு வருகிறார்.
ஒரு பிரச்சனை தீர்றதுக்கு அதைவிட பிரச்சனையான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று சாமியார் ஒய்ஜி மகேந்திரன் எச்சரிக்கிறார். இந்த நிலையில் தான் அந்த அரண்மனையில் உள்ள சந்திரமுகி அறையில் இருந்து நடனமாடும் சத்தம் கேட்கிறது அந்த வீட்டில் உள்ளவர்கள் அதன்பிறகு என்ன ஆனார்கள்? சந்திரமுகி என்ன ஆனது? வேட்டையன் என்ட்ரி என படம் களைகட்டுகிறது என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.
ராகவா லாரன்ஸ் ஜோடியாக நிவேதிதா நடிக்க, முக்கிய கேரக்டர்களில் ஸ்ருஸ்டி மற்றும் லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் இரண்டு தோற்றங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார், குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் வேட்டையனாக அசத்தியுள்ளார்.
அதேபோல் சந்திரமுகி கேரக்டரிலும் கங்கனா ரனாவத் கலக்கி இருக்கிறார் என்பதும் ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது. பிளாஷ்பேக் வேட்டையன் காட்சியில் குதிரையில் படை வீரர்களுடன் செல்லும் போர்க்காட்சிகள் என படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. மொத்தத்தில் ’சந்திரமுகி’ முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments